headerphoto

பழைய பீப்பா..


இலங்கையின் மாணிக்கக்கல் தொழில்துறையில் ஈடுபாடுள்ள ஓர் அதிகாரி ஜேர்மனி சென்றிருந்தார். மாணிக்கக்கல் கைத்தொழிலில் ஐரோப்பாவுக்கே நுழைவாயிலாக விளங்கும் ஹேன்ஸ் ஜேர்கன்மெக்வேர்த் என்ற பிரதேசத்தில் ஆய்வுச் சுற்றுலா செய்தார்.
அங்கு ஓர் ஆடம்பரமான நவீன நிலையத்தில் முக்கியமான இடத்தில் ஒரு பழைய பீப்பா வைக்கப்பட்டிருந்தது. அந்த நிலையத்துக்கே அது பொருத்தமற்றது போன்று காட்சியளித்தது.
இது ஏன் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று இவர் வினவியபோது, "அந்தக் காலத்தில் ஆசிய நாடுகளிலிருந்து, ஏன் உங்கள் நாடான இலங்கையிலிருந்தும் கொண்டுவரப்படும் மாணிக்கக்கற்கள் இந்தப் பீப்பாவுக்குள் தான் வைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பீப்பாவிலிருந்து மாணிக்கக் கற்களைத் தெரிவு செய்து வாங்கிச் செல்வார்கள். பழைய வரலாற்றினை நினைவூட்டும் சின்னமாகவே இந்தப் பீப்பா வைக்கப்பட்டிருக்கிறது" என்று விளக்கமளிக்கப்பட்டது.
நாமென்றால் பழைய பீப்பாவை ஆடம்பர நிலையத்தில் வைத்திருப்போமா?
பழைமையைப் பேணுவதில் ஜேர்மனியர் பிரசித்தி பெற்றவர்கள்.

0 comments:

Post a Comment