headerphoto

ஜல்லிக்கட்டு


புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையட்டி 29.03.09 அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் பங்கேற்றன. இதில் 170 வீரர்கள் காயமடைந்தனர். அடக்க முயன்ற வீரரை கொம்பால் முட்டி, தூக்கி வீசுகிறது காளை.

மாதவி பொன் மயிலால் தோகை விரித்தாள்


மாதவி பொன் மயிலால் தோகை விரித்தாள்: சீனாவின் ஜியாங்சு மாநிலம் நான்ஜிங் நகரில் திருமண கலாசார ஆடை கண்காட்சி நடந்தது. இதில் ஒரு பெண், மயில் தோகையால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து வந்து எல்லோரையும் அசத்தினார்.

கால் வளைவு ...


கால் சற்று வளைந்து காணப்படும் குழந்தைகளை இடுப்பளவு மணலில் புதைத்து வைத்தால் வளைவு சரியாகும் என்று பலரும் கருதுகின்றனர். மெரினா கடற்கரையில் ஒரு குழந்தையை அம்மாவும் பாட்டியும் மணலுக்குள் நிறுத்தி வைத்திருக்கின்றனர். படம்: மாதவன்

ஓடி விளையாடு ...


ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர் இவர். குழந்தை குட்டிகளை தாய்நாட்டில் விட்டுவிட்டு எங்கோ வந்து டூட்டி பார்க்கிறோமே என்ற கவலையுடன் இருந்த இவர், ஆப்கன் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்ததும் உற்சாகமானார். அவர்களுடன் சேர்ந்து ஓடிப்பிடித்து விளையாடுகிறார்.

இருளில் முள்கிய ஈபிள் கோபுரம்


புவி வெப்பமாவதை தடுப்பதற்கு மின்சார உபயோகத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக 28.03.09 அன்று இரவு உலகமுழுவதும் அரைமணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் இருளில் மூழ்கியது. (அடுத்தபடம்) மின் இணைப்பு கிடைத்ததும் மீண்டும் ஜொலிக்கிறது ஈபிள் கோபுரம்.

புதிய பராசக்தி - Video

மேஜிக்! மேஜிக்!!


பெரு நாட்டை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் கிளாடியா பச்சிகோ, லிமாவில் நடத்திய நிகழ்ச்சியில் அந்தரத்தில் அமர்ந்தபடி தியானம் செய்கிறார்.